பெங்களூரு:
10 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் உட்பட 8 அணிகள் கலந்து கொள் கின்றன. இதில் பங்கேற்கும் புதிய வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் தற்போது நடந்து வருகிறது. இதில் இர்பான் பதான், இஷாந்த் சர்மா, இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ், மோர்கன் உட்பட 350 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இவர்களில் 76 வீரர்களை பல்வேறு அணிகளும் வாங்கவுள்ளன.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், இயான் மோர்கன், இலங்கை வீரர் ஆஞ்சலோ மாத் யூஸ், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஜான்சன், பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக ஜானி பேர்ஸ்டோவ், போல்ட், பிராட் ஹாடின், லியான், கைல் அபாட், ஜாசன் ஹோல்டர் ஆகியோருக்கு ரூ.1.50 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இர்பான் பதானுக்கு ரூ.50 லட்சமும், வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனுக்கு ரூ.30 லட்ச மும் அடிப்படை விலையாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்களின் அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் உள்ளது.