சென்னை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் நான்கு 20:20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது.
முதல் 6 ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இந்தியா இழந்தது. ரகானே 5, விராட் கோஹ்லி, மணீஷ் பாண்டே ஆகியோர் டக் அவுட்டாயினர். பின்னர் களமிறங்கிய ஜாதவ் 40 ரன், தோனி 79, பாண்ட்யா 83 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். புவனேஸ்குமார் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆஸ்திரேலியா விளளயாட தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இருமுறை பாதித்தது. இறுதியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக பெரிதும் போராடினாலும் ஒரு புறம் விக்கெட் சரிந்தது. இறுதியாக ஆஸ்திரேலியா 21 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.