டில்லி,

த்மபூஷன் அவார்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் மிகஉயர்ந்த விருதான பத்மவிருதுகள்  கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் – தொழில்நுட்பம், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், சிறந்த சேவை ஆற்றியோருக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பத்மபூஷன் விருது வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்தை பிசிசிஐ மூத்த  அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்ட தோனி இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளார். மேலும், 90 மேட்சில் விளையாடி 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை என்றும், அதன் காரணமாகவே அவர் பத்மபூஷன் அவார்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிகாரி கூறினார்.

இந்த ஆண்டு பத்மபூஷன் விருதுக்கு வேறு யாரையும் பரிந்துரை செய்யவில்லை என்றும் கூறி உள்ளார்.

36 வயதான தோனி இதுவரை ஒரு விளையாடி உள்ள 302 ஒருநாள் மேட்சில் 9737 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 90 டெஸ்ட் மேட்சில் விளையாடி 4876 ரன்களையும் குவித்துள்ளார். மேலும் 78 டி20 மேட்சில் விளையாடி 1212 ரன்களையும் எடுத்துள்ளார்.

மேலும் இதுவரை விளையாடி உள்ள சர்வதே போட்டிகளில் 16 தடவை (6 டெஸ்ட் மேட்ச், 10 ஒருநாள் மேட்ச்) நூறு ரன்களை எடுத்தும் சாதனை படைத்து உள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட அரை சதங்களும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

அவர் விக்கெட் கீப்பர் செயல்பட்டடு 584 பந்துகளை பிடித்தும் சாதனை படைததுள்ளார்.  இந்த கேட்ச்கள் 256 டெஸ்ட் மேட்ச் மற்றும் 285 ஒருநாள் மேட்ச் மற்றும் 43 டி20 விளையாட்டுக்களின் மூலம் பெற்றுள்ளார். மேலும் அவர் 163 ஸ்டம்ப்டிங்க்களை ஏற்படுத்தி உள்ளார்.

தோனி ஏற்கனவே பெருமைமிக்க அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ அவார்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தோனிக்கு அந்த விருது கிடைக்கும் பட்சத்தில், அவர் மூன்றாவது சிறந்த குடிமகன் கவுரவத்தை பெறும் 11 வது இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.

ஏற்கனேவே இந்த விருது முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவன்களான

சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், சுனில் காவாஸ்கர், ராகுல் திராவிட், சந்து போர்டே, பேராசிரியர் டி.பி. டீஹோத்ர், கேல் சி.கே நயுடு மற்றும் லலா அமர்நாத் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு  தமிழகத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இஷா யோகா தலைவர் ஜக்கிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.