சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஒரே நாளில் புதுச்சேரி மற்றும் தெலுங்கான மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்து வருகிறார். இதற்கிடையில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டதும், அம்மாநிலத்தின் பொறுப்பு துணை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கமான நடைமுறை. அதை நிறைவேற்றும் வகையில், இன்று காலை தெலங்கானாவில் தேசியக் கொடியை ஏற்றினார். ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அம்மாநில மக்களுக்கு உரையாற்றிய தமிழிசை, தெலுங்கானா மாநிலம் மற்றும் தேசத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு, பெண்களிடையே கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, தொழில்முனைவு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவது இன்றியமையாதது என்று தரமான உயர்கல்வியில் தெலுங்கானா முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இதையடுத்து, தனிவிமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்த ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி கடற்கரைச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் பதக்கங்களை வழங்கி கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.
குடியரசு தினவிழாவில் இரு மாநிலங்களில் தேசியக்கொடியை ஆளுநர் ஏற்றுவது முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.