8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவர்கள்! இது தலைநகரின் அவலம்…

Must read

டெல்லி: தலைநகர் டெல்லியில்  8 வயது சிறுமியை சுமார் 12 வயதுகொண்ட 2 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி கண்மூடித்தனமான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதன் காரணமாக ஏராளமான பேரழிவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுவரை இளைஞர்கள், பெரியோர், முதியோர் என இருந்த பாலியல் தொல்லைகள் சமீக காலமாக சிறுவர்களிடமும் அதிகரித்து உள்ளது. அதுபோல சிறுமிகளும், மாணவிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அதை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில்தான் டெல்லியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள  சாஸ்திரி பூங்கா பகுதியில் தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்து வரும் நபரின் 8 வயது பெண் குழந்தை, இரு சிறுவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சுமார் 8 வயதுள்ள அந்த சிறுமி கடந்த நேற்று முன்தினம் (24ந்தேதி)  மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 12வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள்,  அந்த சிறுமியை மறைவிடத்துக்கு இழுத்து சென்றுள்ளனர். பின்னர், அந்த இரண்டு சிறுவர்களும் சேர்ந்து அந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடிவிட்டனர்.

இதனால் கடுமையான அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து, அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று  தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சிறுமியில் உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர்,  ஐ.பி.சி. 363 ( ஆள்கடத்தல்) ஐ.பி.சி. 376 ஏபி( பாலியல் தாக்குதல்) ஆகியே போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவர்களை தேடினர். அருகே இருந்த சிசிடிவி புட்டேஜ் மற்றும் அந்த பகுதியில் வசிப்போரிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அந்த 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிறுவன்களில் ஒருவன்   பீகாரைச் சேர்ந்தவன். தந்தையை இழந்த அந்த சிறுவன் தனது உறவினர்களின் வீட்டில் வசித்து வருகிறான் என்பது தெரிய வந்துள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வயது வித்தியாசமின்றி,  மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More articles

Latest article