அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு நாகர்கோயில் கோர்ட், பிடிவாரணட் பிறப்பித்துள்ளது.
இது குறித்து விஜதரணி கருத்து தெரிவிக்கையில், “மதுவிலக்கு கேட்டு போராடிய என் மீது அவதூறு பேசியதாக அரசு தரப்பு வழக்கறிஞரே பொய் வழக்கு போட்டிருக்துகிறார். அது மட்டுமல்ல… என் கணவர் மறைந்த நூறாவது நாள் நினைவு அஞ்சலி கூட்டம் இருக்கிறது. தவிர சட்ட பேரவை தொடங்குவதற்கு முன் நடைபெறும் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை செல்ல வேண்டும். இதையெல்லாம் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்ட பின்பும் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அரசு, அரசுத் துறையை தவறாக பயன்படுத்துவது கண்டனத்துக்குறியது” என்று விஜயதரணி தெரிவித்துள்ளார்.