சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் 2 தொகுதிகளிலும் அதிமுக அமைச்சர்களையும், ஒரு தொகுதியில் டிடிவி தினகரனையும் எதிர்த்து மார்க்சிஸ்டு களமிறங்குகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 3 தொகுதிகள், பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 173 தொகுதிகள் திமுக நேரடியாக களம்காண உள்ளது. கூட்டணி கட்சியினர் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எனவே உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண்கிறது.
இந்த நிலையில், மார்க்சிஸ்டு கட்சி சார்பில்
- கோவில்பட்டி
- திருப்பரங்குன்றம்
- திண்டுக்கல்
- கந்தர்வக்கோட்டை (தனி)
- அரூர் (தனி)
- கீழ்வேளூர் (தனி)!
ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில்,, திருப்பரங்குன்றரம், திண்டுக்கல் & கோவில்பட்டி தொகுதிகளில் கடுமையாக போட்டியை எதிர்கொள்ள உள்ளனர்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு மற்றும டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் ராஜன்செலலப்பா ஆகியோரை எதிர்கொள்ள உள்ளனர்.