சென்னை:

ந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  அரசின் நோட்டீசை தொடர்ந்து, தான் வசித்து வந்த அரசு குடியிருப்பை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் வசித்து வருகின்றனர். தற்போது அந்த வீடுகள் சிதலமடைந்து உள்ளதால், அதை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட தமிழக வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அங்கு குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டை காலி செய்யும்படி, அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து பலர் வீடுகளை காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  அரசு குடியிருப்பை எந்தவித எதிர்ப்புமின்றி காலி செய்துவிட்டு,  கே.கே.நகர் பகுதியில் குடியேறினார்.

இந்த நிலையில்,  மூத்த அரசியல் தலைவரான நல்லகண்ணுவுக்கு  வேறு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.