எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று அந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் ராசேந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானமும் இயற்றப்பட்டது.
“எச். ராஜா வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருகிறார். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதோடு, , தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் பதிவிட்டார். இதனால் சட்டம் ஒழுங்கு அமைதி கெடுகிறது.
ஆகவே எச். ராஜா பேசும் கூட்டங்களுக்கு புதுக்கோட்டையில் அனுமதி அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அம்மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மனு அளிப்போம்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.