டெல்லி : 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பதிவு இன்று தொடங்கி உள்ளது. கோவின்இணைய தளம் மற்றும் கோவின் ஆப்-பில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் ஒமிரான் தொற்றும் தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிகளை தீவிரமாக செலுத்த அறிவுறுத்தியுள்ள மத்தியஅரசு, 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடவும், 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கியது.

இதுதொடர்பாக கடந்த வாரம் மக்களுக்கு உரையாற்றிய  பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து, 15 முதல் 18 வயதுக்குட்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள கோவின் தளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே  அறிவித்திருந்தது. அதன்படி, 2007ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள்.

இதைத்தொடர்ந்து இன்று 15 முதல் 18வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் தளத்தில்   முன்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறத.   மற்ற வயதினரும் தடுப்பூசி செலுத்த வரும்போது கோவின் தளத்தில் பதிவிடுதலின்போது குழப்பம் நேரிடக்கூடாது என்பதற்காக இந்தப் பிரிவினருக்கு மட்டும் தனி மையம், தனியாக செவிலியர்கள்,தடுப்பூசி செலுத்தும் குழுக்கள், மருத்துவர்களை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டீனேஜெர்களுக்கான 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு  கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படஉள்ளதால், பல்வேறு மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி மருந்து மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியபின்  அவர்கள் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,  முதல் டோஸ் செலுத்திய 28 நாட்களுக்குப்பின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு செய்வது எப்படி?

சிறார்கள் வேக்சின் முன் பதிவை செய்ய பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்.

https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும்.

வயதானவர்கால் எப்படி ரிஜிஸ்டர் செய்தனரோ அதேபோல் செய்தால் போதும்.

அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது.

எனவே இவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும்.

இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விவரம் இருக்க வேண்டும்.

15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைட்ஸ் கேடில்ல்லா நீடில் இல்லாத வேக்சின் இரண்டும் வழங்கப்படுகிறது.

அதே சமயம் சிறார்களுக்கு என்ன வேக்சின் போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்.