மதுரை: இன்று நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் காயமடைந்த 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடெபற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். இதில் டி-ஷர்ட்டை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்த மாடுபிடி வீரர்கள் 14 பேரை கண்டறிந்த விழாக்குழு அவர்களை தகுதி நீக்கம் செய்தது. அதுபோல காளைமுட்டியல்ல் 11 வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் அதிக காயம் அடைந்த 3 வீரர்கள் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 9 காளைகளை பிடித்து 3ம் இடத்தில் இருந்த பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜ், காளை குத்தியதில் வலது பக்க வயிற்றியல் பலத்த காயமடைந்தார். இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.