க்னோ

மாடு வெட்டுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என உத்திர பிரதேச காவல் அதிகாரி (DGP) சுல்கான் சிங்க் அறிவித்துள்ளார்

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யா பதவி ஏற்றதில் இருந்தே அவருடைய அமைச்சகம், பசு வதை மற்றும் அதற்கு ஆதரவான எந்த ஒரு செய்கையும் கடுமையான செய்கை என அறிவித்து வந்தது.

இதையொட்டி தற்போது டி ஜி பி அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பசுவதையில் ஈடுபடும் எந்த ஒரு தனி மனிதர் அல்லது குழு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிவிப்பில் காணப்படுவதாவது

காவல்துறை அதிகாரிகள் பல கண்காணிப்புக் குழுக்களை அமைத்து சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல் காக்க வேண்டும்

ஜாமீனில் வந்திருக்கும் ரவுடிகள், எல்லாருடைய ஜாமீனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிக் பாக்கெட் மற்றும் ஈவ் டீசிங்கை கட்டுப்படுத்த அனைத்து பொது இடங்கள், ஷாப்பின்க் மால்கள், போன்ற இடங்களை ஆண் பெண் போலிசார்கள் கண்காணிக்க வேண்டும்

அதிகமான சத்தம் செய்யும் ஹாரனை கொண்ட வாகனங்கள், கட்சிக் கொடியை வைத்திருக்கும் வாகனங்கள், கண் கூசும் வண்ண விளக்குகள் கொண்ட வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்.   ஆகவெ இது போல வாகனங்கள் வைத்திருப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.