டெல்லி: செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும் என்று தேசிய காமதேனு ஆணைய தலைவர் வல்லபாய் கதிரியா கூறி இருப்பது, சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய காமதேனு ஆணையம், 2019ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மாட்டு சாணத்தின் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு தழுவிய  காம்தேனு தீபாவளி அபியான் என்ற பிரச்சார திட்டம் அறிமுகமானது.
நிகழ்ச்சியில் தேசிய காமதேனு ஆணைய தலைவர் வல்லபாய் கதிரியா  மாட்டு சாணத்தாலான செல்போன் சிப் ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: செல்போன்  கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த மாட்டு சாணத்திலிருந்து இந்த சிப் தயாரிக்கப்பட்டுள்ளது.
50 ரூபாய் முதல் ரூ.100 வரை விலையில் கிடைக்கும். கவ் கவாச் என்று அழைக்கப்படும் இந்த சிப், ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீஜி கோசாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாட்டு சாணம் செல்போன் கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் என்ற அவரது கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.