டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி என்றும் சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பூசி தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் இரு டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிஷில்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மற்றும் கோவோவேக்ஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது.
சமீபத்தில், தனியார் தடுப்பூசி மையங்களில் ஏப்ரல் 10 முதல் அனைத்து பெரியவர்களுக்கும் COVID-19 முன்னெச்சரிக்கை டோஸ் கிடைக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களில் சீரம் நிறுவனம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் விலையை அறிவித்து உள்ளது.
அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி என்றும், கோவோவேக்ஸ் தடுப்பூசியின் விலை ரூ.900 + வரி என்றும், என சீரம் நிறுவன இயக்குனர் ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார். இந்த புதிய விலைகள் ஏப்ரல் 10நதேதி முதல் அமலுக்கு வருவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், மருத்துவமனைகளுக்கு தள்ளுபடி விலையில் ஜாப் கிடைக்கும் என்று SII மேலும் கூறி உள்ளது.