ஈரோடு:
கொரோனா தொற்றில் இருந்து விடுப்பட்டநோயாளிகள், டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு, மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி தப்லிகி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.
இவர்களில் ஏராளமானோருக்கு நோய்த்தொற்று குணமான நிலையில், பலர் வீடு திரும்பி வருகின்றனர்.
ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் பலர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். முன்னதாக அவர்கள், தங்களுக்கு சிகிச்சை மற்றும் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்தனர்.