சென்னை:
தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்துள்ள 13 நகரங்களில் ஊரடங்கு மேலும் 15 நாட்கள் பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மால்கள், உணவு விடுதிகள் சமூக இடைவெளியுடன், சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்கட்டகமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவின் தாக்கம் குறையாத தால், ஊரடங்கு 3வது முறையாக மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் பல பணிகளுக்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. பின்னர் 4வது கட்டமாக, மே 17 ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் சென்னை உள்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட 14 மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகவே உள்ளது.
இதனால் ஊரடங்கு குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட 13 நகரங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலில் சுமார் 70 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட இந்த 13 நகரங்களில் மட்டுமே உள்ளதை சுட்டிக்காட்டி அந்த பகுதிகளில் தொற்று பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இதை நிலை நீடித்தால், ஜூலை மாதம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் பரிசோதிக்கப்படுவதாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய சிறப்புப் பணிக்குழுத் தலைவர் டாக்டர் வி கே பால் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டபடி சென்று வருவதால் கிருமிப் பரவல் கூடி வருவதாகவும், அதேபோல வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களும் தனி இடத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி இந்தியா முழுவதும் மொத்தம் 23 லட்சம் பேர் தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இதையடுத்து, கொரோனா தாக்கம் குறையாத நகரங்களில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் 5 வது முறையாக பல்வேறு தளர்வுகளுடன் நீடிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, மால்கள், உணவு விடுதிகள், வழிப்பாட்டுத் தளங்கள் உள்பட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள், சமூக இடைவெளியுடன், முகக்கவசம், சானிடைசர் உள்பட சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள், மகாராஷ்டிராவில் மும்பை, டில்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா -ஹவுரா, இந்தூர்-மத்தியப் பிரதேசம், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் – ராஜஸ்தான், ஆகிய 13 நகரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு, சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 28 ஆம் தேதி மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கின் காரணமாக மொத்தம் 1.20 கோடி பேர் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று அனைத்துலக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஊரடங்கு காரணமாக வருமான இடைவெளி கூடும் என்றும் ஏழ்மை இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.