சென்னை: தமிழகத்தில்  கொரோனா உள்பட அவசர மருத்துவ சிசிச்சைக்காக ‘ஜீரோ டிலே வார்டு’ தொடங்கப்பட்டு உள்ளதாக  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக,  அரசு மருத்துவமனைகளில் தனி, கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அங்கு கொரோனா சிகிச்சைகாக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டை சுற்றிப் பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி, கொரோனா தொற்று பரவலை தடுக்க தேவையான உடனடி நடிவக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவசர சிகிச்சை மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பை உறுதிசெய்ய ஜீரோ தாமத வார்டு  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், தொடங்கப்பட்டு இருப்பதாக இதில்  கோவிட் வசதிகளும் அடங்கும் என  தெரிவித்து உள்ளார்.

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக,  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 800 முதல் 1200 படுக்கைகள் வரை  உள்ள தனி வார்டுகள் செயல்பட்டு வருகிறது என்றும்,  அத்துடன், கோவிட் ஐ.சி.யூ, தனிமைப்படுத்தும் வார்டு, பின்தொடர்தல் மருத்துவமனை, 1.80 சி.ஆரில் 16 ஸ்லைஸ் சி.டி ஸ்கேன், பிரத்தியேக எக்ஸ்-ரே, யு.எஸ்.ஜி, சி.டி ஸ்கேன் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.