டெல்லி: கொரோனா நெருக்கடியால் இனி வருங்காலங்களில் சுகாதார காப்பீட்டில் ஆன் லைன் மருத்துவ வசதிகள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய் ஏராளமான சேவைகளை ஆன்லைன் வழியே பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தை உருவாக்கி உள்ளது. லாக்டவுன் போது மருத்துவ மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்லாமல் மருத்துவரை அணுக வேண்டிய பலருக்கு டெலிமெடிசின் சிறந்த வசதியை வழங்குகிறது.

தரமான மருத்துவ சேவை கிடைப்பது ஒரு பிரச்னையாக இருக்கும் பல நகரங்கள் மற்றும் நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு தொலைத்தொடர்பு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

சமீபத்திய இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ சுற்றறிக்கை இப்போது காப்பீட்டாளர்களுக்கு டெலிமெடிசின் செல்லுபடியாகும் மருத்துவர் ஆலோசனையாக அங்கீகரிக்க அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி தொலைபேசி, மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொலைத் தொடர்புகளை வழங்க மருத்துவர்களை அனுமதித்த இந்திய மருத்துவ கவுன்சில், இப்போது வழிகாட்டுதல்களுக்குப் பதிலாக ஐஆர்டிஏஐ இந்த வழிமுறைகளை வெளியிட்டது.

சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் கீழ் வரும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு மாற்றாக தொலைத் தொடர்புகளை ஏற்றுக்கொள்ளும் செயல்முறைகளை காப்பீட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். இந்த மருத்துவ காப்பீட்டு வழிகாட்டுதல்களுடன், காப்பீடுதாரர் இப்போது நேருக்கு நேர் ஆலோசனைகளுக்கு மாற்றாக தொலைத் தொடர்புகளுக்கு உரிமை கோர முடியும்.

நேருக்கு நேராக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது இல்லை. இருக்கும் இடத்தில் இருந்தே தொலைத்தொடர்பு முறையில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். மருத்துவமனையில் சேர்ந்த பின்போ அல்லது சேருவதற்கு முன்போ இந்த ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவமனையில் இறுதி சிகிச்சைக்கான செலவுகள் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி வழங்கப்படுகின்றன. இந்த ஆலோசனையின் பேரில் வழங்கப்படும் மருத்துவ பரிந்துரைகள், சிகிச்சைக்கு பிறகு மற்ற மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

அதற்கான அனைத்து ரசீதுகள் மற்றும் மருந்துகளில் மருத்துவரின் பெயர் மற்றும் அவரது பதிவு எண் இருக்க வேண்டும். அனைத்து ரசீதுகளும் கணினியில் மூலமாக உருவாக்கப்பட்டு தனிப்பட்ட ரசீது எண்ணைக் கொண்டிருக்க வேண்டும்.

சுகாதார பயன்பாடு அல்லது வலைத்தள ஆலோசனையின் அனைத்து பதிவுகளையும் வைத்திருக்க வேண்டும். கணினியில் ஸ்கிரீன் ஷாட்டாக அனைத்து ஆலோசனைகளின் பதிவையும் கூடுதலாக வைத்திருக்கலாம்.