தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று 1484 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது சென்னையில் மட்டும் 632 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா பரவல் குறித்த தரவுகளை ஆய்வு செய்ததில் மால்கள் பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து அதிகளவு பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மால்கள், பொது இடங்கள், வியாபார சந்தைகளில் இருந்து 26 சதவீதம் பரவல் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

18 சதவீதம் அலுவலகங்கள் மூலமாகவும்

பயணங்களின் போது 16 சதவீதமும்

12 சதவீதம் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும் பரவல் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைப்புகள் மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

[youtube-feed feed=1]