துபாய்: அபுதாபியைச் சேர்ந்த ஜி42 ஹெல்த்கேர் மற்றும் சினோஃபார்ம் சிஎன்பிஜி என்ற மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான கட்டம் III ஆய்வக சோதனைகளை தான் நடத்தவுள்ளதாக சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட சோதனையானது, உலகிலேயே இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

இந்நிறுவனம், உலகின் 6வது மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனமாகும். அபுதாபிக்கு வெளியே அல் கொராயன் சுகாதார மையம் முதன்முதலாக ஷார்ஜாவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், தன்னார்வலர்கள் பதிவுசெய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒருநாளில் 500 தன்னார்வலர்கள் வரை பதிவுசெய்துகொள்ள முடிவதோடு, ஷார்ஜா மற்றும் அருகிலுள்ள பிற அமீரகங்களில் உள்ளவர்களும் பயன்பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற முதற்கட்ட & இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் சீனாவில் நடைபெற்றன.

[youtube-feed feed=1]