ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக அரசு நிறுவனமான பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்யும், 25 சதவீதங்களை தனியார் சந்தையில் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் ரூ.150 என பாரத் பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இது நிரந்தரமானது அல்ல என்று தெரிவித்து உள்ளது. மத்திய அரசுக்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்குகுவதால், உற்பத்தி திறன் பாதிக்கிறது, இந்த விலைக்கு  நீண்ட நாட்கள்  வழங்க முடியாது என குறிப்பிட்டு உள்ளது. எனவே உற்பத்தி திறன் பாதிப்பை சரிகட்டவே தனியார் மார்க்கெட் விலையை உயர்த்தியுள்ளோம். அதனால்தான  தனியார் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான காரணத்தை பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது .

தற்போதைய நிலையில்,.தனியார் மார்க்கெட்டில் கோவாக்சின் தடுப்பூசி ரூ .1,200 விலையுடன் , ஜி ஸ்டி ., ரூ .60 மற்றும் சேவைக் கட்டணம் ரூ .150 சேர்த்து மொத்தம் ரூ .1,410- க்கு பயனர்களுக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியானது , ரூ .600 விலையுடன் , ஜிஎஸ்ட ரூ .30 மற்றும் சேவைக் கட்டணம் ரூ .150 சேர்த்து , மொத்தம் ரூ .780- க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது .

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரூ.948 விலையுடன், ஜிஎஸ்டியாக, ரூ.47 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1,145-க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.