டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், 45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது.

உயிரிக்கொல்லி நோயான கொரோனவை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை தீவிரப்படுத்த மத்தியஅரசு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. மேலும், முக்கவசம், சமுக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், 2வது கட்டமாக 60 வயது மேற்பட்டோர், 3வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இதற்கு மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. ஆனால்,தொற்று பரவல் உச்சம் பெற்று வருவதால், அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.
இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அத்துடன் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]