புதுடெல்லி:
இந்தியாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட வெகுவாக குறைவாக கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தை தாண்டியது, ஆகஸ்ட் 23 ஆம் தேதி 30 லட்சத்தை தாண்டியது, செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தை தாண்டியது, செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தை தாண்டியது, செப்டம்பர் 28 ஆம் தேதி 60 லட்சத்தை தாண்டியது, அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தை தாண்டியது, அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் தாண்டியது. அதேபோல் டிசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
மேலும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைவாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.