புதுடெல்லி:
ண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில் தளர்வுகள் இருந்தபோதிலும், மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான முழு அடைப்பு காலகட்டத்தில் மால் உரிமையாளர்கள் அவர்களுக்கு மாதாந்திர வாடகையில் முழு தள்ளுபடி வழங்கிய நிலையிலும், சில்லரை விற்பனையாளர்கள் இது போதாது என்று தெரிவித்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சில மால் உரிமையாளர்கள் குறுகிய கால வாடகைக்கு ஒப்புக்கொண்டு வருவாய் பங்கு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர், மேலும் முழு அடைப்பு மாதங்களில் அதிகமான தள்ளுபடியை வழங்கியுள்ளனர். மேலும் சில மால் உரிமையாளர்கள் இப்பொழுதும் வாடகையில் 20-30% வரை தள்ளுபடி தருவதாக தெரிவித்துள்ளனர்.
பல வகையில் அரசு தளர்வுகள் அளித்துள்ள போதிலும் இந்த முழு அடைப்பு வணிகங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மால்களை  நடத்துபவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வாடகை விதிமுறைகளில் இன்னும் தளர்வு வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் விஜய் சேல்சின், நிர்வாக இயக்குனர் விஜய் குப்தா இதைப்பற்றி தெரிவித்துள்ளதாவது: தீபாவளி காலத்தில் சில்லறை விற்பனையாளர்களுக்கு வணிக அடிப்படையில் நல்ல லாபம் வரும் என்று நம்புகிறேன், சில்லரை விற்பனையாளர்கள் உடன் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் ஆனால் எங்கள் ஒப்பந்தம் இதை அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் சில்லரை விற்பனையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. மால் உரிமையாளர்கள் மாதாந்திர வாடகையில் அதிகமான சலுகைகள் வழங்கிய போதிலும் சில்லரை விற்பனையாளர்கலால் அதை ஈடு செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
கடந்த சில வாரங்களாக நகரங்களிலுள்ள சில மால்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது, ஆனால் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் இதற்கு அனுமதி இல்லை, இதனால் சில்லரை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் பண்டிகை காலம் வரை வாடகையில் தள்ளுபடி கேட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.