டெல்லி: இந்தியாவில், மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே 4 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது COVOVAX, CORBEVAX என்ற 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், பிறழ்வு தொற்றான ஒமிக்ரான் (Omicron) அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 600க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணிகளை மத்தியஅரசு முடுக்கி விட்டுள்ளதுடன், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் பொதுமக்களின் அவசர கால பயன்பாட்டுக்கு COVOVAX மற்றும் CORBEVAX உட்பட MOLNUPRAVIR மருந்தை அங்கீகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. CDSO இன் SEC (Subject Expert Committe) விஞ்ஞானிகளின் குழு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் COVOVAX மற்றும் BIOLOGICAL E’s CORBEVAX தடுப்பூசிக்கு DCGI நிபந்தனை ஒப்புதலுக்கு பரிந்துரைத்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுஉள்ளது.
கார்பேவாக்ஸ் தடுப்பூசி என்பது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-E நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட RBD புரத துணை அலகு தடுப்பூசி ஆகும்.தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3-வது தடுப்பூசி இதுவாகும்.
அதுபோல சீரம் நிறுவனம் தயாரித்துள்ள, நானோ துகள்கள் தடுப்பூசி கோவோவாக்ஸ் (COVOVAX). இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 தடுப்பூசி. இந்த தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ் & கார்பேவாக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பதிவிட்டுள்ள டிவிட்டில், கோவோவாக்ஸ் (COVOVAX) கார்பேவாக்ஸ் (CORBEVAX) தடுப்பூசிகளுக்கும், மோல்னுபிராவிர் (MOLNUPRAVIR) ஒரு வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், மோல்னுபிராவிர் மருந்தானது, நாட்டில் 13 நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்து. இது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வயது வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படும் என்றும தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் கோவோவாக்ஸ், கார்பேவாக்ஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 வெளிநாடுகளைச்சேர்ந்த தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 6 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே COVOVAX தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான Novavax இன் COVOVAX தடுப்பூசி, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மூன்றாம் கட்ட சோதனையில் 90.4 சதவீதமும், பிரிட்டனில் மூன்றாம் கட்ட சோதனையில் 89.7 சதவீதமும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இதை இந்தியாவில் தயாரிக்கிறது.
COVOVAX உடன் கூடுதலாக, Biological E தடுப்பூசி, CORBEVAX இன் நிபந்தனை ஒப்புதலை DCGI க்கு SEC பரிந்துரைத்துள்ளது. Biological E’s CORBEVAX தடுப்பூசி என்பது வைரஸின் ஸ்பைக் புரதத்தில் இருந்து தயாரிக்கப்படும் “recombinant protein sub-unit” ஆகும். இந்த தொழில்நுட்பத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட Corbevax தற்போது கோவிட் நோய்க்கான முதல் தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Covovax மற்றும் Corbevax தடுப்பூசிகளுக்கு கூடுதலாக, SEC ஆனது Merk நிறுவனத்தின் Molnupiravir எதிர்ப்பு கோவிட் மருந்தின் ஒப்புதலை DCGI க்கு பரிந்துரைத்துள்ளது.
Molnupiravir லேசான கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. Molnupiravir என்பது ஒரு கோவிட் எதிர்ப்பு மருந்தாகும், இது கோவிட் பாதிக்கப்பட்டவருக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடன் சிகிச்சையின் போது கொடுக்கப்படுகிறது, இதனால் அவர்கள் தீவிரமாக நோய்த்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கப்படுகிறார்கள். அதிக ஆபத்துள்ள கோவிட் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இந்த மருந்து தீவிர நோய்கள் மற்றும் இறப்புகளை 30 சதவீதம் குறைக்கிறது என்று தெரியவந்துள்ளது.