சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே சமயம் மற்ற மாவட்டங்களில் கோவிட் -19 உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாட்டில் 4,150 புதிய நோயாளிகள் உறுதி செய்யப்பட்டனர். இதில் 56% சென்னை (1,713) மற்றும் அதன் மூன்று அண்டை மாவட்டங்களான காஞ்சீபுரம் (152), திருவள்ளூர் (209) மற்றும் செங்கல்பட்டை (274) சேர்ந்தவர்கள் ஆவர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்த நான்கு மாவட்டங்களும் சேர்ந்து தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கையில் 72% பங்களித்தன.

THANKS: NEWS 7
ஞாயிற்றுக்கிழமை பதிவான மீதமுள்ள 44% நோயாளிகளில், மற்ற மாவட்டங்களில் இருந்து குறிப்பாக மதுரை (308), வேலூர் (179), திருவண்ணாமலை (141), விருதுநகர் (113) மற்றும் விழுப்புரம் (109) ஆகியவை அடங்கும். இதன் மூலம், மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 46,860 ஆக அதிகரித்துள்ளது. புதிய நோயாளிகளைத் தவிர, பிற மாவட்டங்களிலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பதிவான 60 இறப்புகளில், கிட்டத்தட்ட 30% மாவட்டங்களைச் சேர்ந்தவை, மீதமுள்ள 42 பேர் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற கொமொர்பிடிட்டிகளைக் கொண்டிருந்தவர்கள் ஆவர். சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் தைமோமா (புற்றுநோய்) உடன் இருந்து ஞாயிற்றுக்கிழமை பலியானார். மூன்று பேர் மட்டுமே, எந்தவொரு கொமொர்பிடிட்டியும் இல்லாமல் சுவாசக் கோளாறு காரணமாக இறந்தனர். அவர்கள் மூவரும், 60 வயதிற்குட்பட்டவர்கள், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வந்தவர்கள் ஆவர். இந்த இறப்புகளுடன், மாநிலத்தின் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 1,500 ஐத் தாண்டியது – இது நாட்டின் மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். சோதனையைப் பொருத்தவரை, சனிக்கிழமை செய்யப்பட்ட 36,164 சோதனைகளில் இருந்து சற்றே குறைந்து ஞாயிற்றுக்கிழமை 34,831சோதனைகள் செய்யப்பட்டன.

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்சஸின் ஆய்வகத்தில் கோவிட் -19 சோதனைக்கு புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கையை 95 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விமானம், ரயில் மற்றும் சாலை கண்காணிப்பு முகாம்களில் மேலும் 73 பேருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சொந்த ஊர் திரும்பியவர்களில் தொற்றுநோய்களுடன் திரும்பிய மொத்த பயணிகளின் எண்ணிக்கை 3,858 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த மாதம் 1,700 ஆக இருந்தது தற்போது இரட்டிப்பாகியுள்ளன. எச்சரிக்கை! மற்ற மாவட்டங்கள் சென்னையாகிக் கொண்டுள்ளன!!
தமிழில்: லயா
Patrikai.com official YouTube Channel