உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேசத்தில், தப்லீக்-எ-ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தற்காலிகாமாக ஜெயிலில் அடைக்க மத்திய பிரதேச முதலமைச்சர் ஆதித்தநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 1 முதல் டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் கூடிய வெளிநாட்டவர்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதனால், கடந்த மார்ச் 27 முதல் 31 வரை 281 வெளிநாட்டவர் உள்ளிட்ட 2,137 பேர் வெளியேற்றப்பட்டு மர்கஸ் சீல் வைக்கப்பட்டது. கொரோனா பரவ முக்கியக் காரணமாக இருந்ததாக தப்லீக்-எ-ஜமாத்தின் தலைவரான முஹம்மது சாத் உள்ளிட்ட 7 நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தப்லீக்-எ-ஜமாத் உறுப்பினர்கள் பலரை கைது செய்து தற்காலிக சிறையில் வைக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்தநாத் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் உத்தரவை தொடர்ந்து கைது செய்யப்படும்தப்லீக்-எ-ஜமாத் வழக்கமான சிறைகளில் அடைக்கப்பட மாட்டார்கள். இவர்களுக்கென மாநிலத்தில் 23 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 19 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 640 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில், 15 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 3,869 பேர் குணமடைந்துள்ளனர், உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 1,300 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனித ரம்ஜான் மாதத்தில் அத்தியாவசிய பொருட்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவஸ்தி தெரிவித்தார். இதுகுறித்து கோட்ட ஆணையர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மற்றும் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கொரோனா வைரஸால் இறந்த எந்தவொரு நபரின் உடலையும் மாநிலத்திற்கு வெளியே கொண்டு வர மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று அவஸ்தி மேலும் கூறினார்.
அலகாபாத்தில், பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளதாகவும், இதில் 16 பேர் தப்லீக்-எ-ஜமாத் உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், பேராசிரியர் முகமது ஷாஹித், இந்தோனேசியர்களை நகரில் உள்ள ஒரு மசூதியில் அடைக்கலம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டார். கோட்வா பானியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தோனேசியர்களில் ஒருவருக்கு கொரோனா சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் அலகாபாத் காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.