டெல்லி

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 640 ஐத் தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுப் பரவல் குறித்த ஆய்விற்கு 1921 என்ற எண்ணில் மக்களை அழைத்து புள்ளி விவரங்களை மத்திய அரசு திரட்டவுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆரோக்கிய சேது உள்ளிட்ட செயலிகள் வழியே மத்திய அரசு கொரோனா விழிப்புணர்வை தந்து வருகிறது.

இந்நிலையில் 1921 என்ற அழைப்பை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வழியே இந்தியர் அனைவரையும் தொடர்பு கொண்டு கொரோனா பரவல், அறிகுறிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களை திரட்ட உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “1921 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் இந்த ஆய்விற்கு தங்களின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்” என சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.