புதுச்சேரி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் தவித்த 300 பிரான்ஸ் நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார் 300 பேர் சுற்றுலாவாக புதுவை வந்திருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப் பட்டதால் இவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதனால் புதுச்சேரியில் முடங்கி கிடந்த இவர்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்படி இங்குள்ள தூதரகத்தை கேட்டுக் கொண்டனர். அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து 300 பேரும் இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வந்தனர். ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பின், அனைவரும் பேருந்து மூலம் சென்னை அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.