கான்பூர்:

த்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மதரஸா ஒன்றில் தங்கியிருந்து படித்து வந்த  மாணவர்கள் 30 பேரில்  13 பேருக்கு கொரோனா தொற்று உறுயாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தமிழக்ததைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து , நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில்,  கான்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் சுக்லா கூறுகையில், கான்பூர் அருகே உள்ள கூலி பஜாரில் உள்ள  மதரஸா மாணவர்கள் பலர் இருமல் சளியால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 50 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மற்றவர்கள் , மதரஸாவில் தனிமைப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கான்பூரில் இதுவரை 7  பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர், 7 பேர் குணமடைந்து உள்ளனர், இதுவரை 107 போதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.