தென்காசி: தென்காசி அருகே உள்ள குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான வெண்கலப் பாத்திரங்களை பேரூராட்சி பணியாளர்கள் எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பாரம்பரியம் மிக்க பழமையான பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடுவதற்காக எடுத்துச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குற்றாலத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ளது குற்றால நாதர் கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. இங்கு இறைவன் திருக்குற்றால நாதராகவும், இறைவி குழல்வாய்மொழி என்ற பெயரிலும் அருள்பாலித்து வருகிறார்கள். திருக்குற்றாலநாதசுவாமி கோயில் முதலில் வைணவ கோயிலாக இருந்ததாகவும் அகத்தியர்,பெருமாளை குறு குறு குற்றாலநாதராக மாற்றினார் என்பதும் புராணச் செய்தி
.ஆகையால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும் அதைப்போக்க தினசரி காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.மேலும் அர்த்தசாம பூசையின் போது மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் அக்கோவிலின் பிரசாரத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு.
இக்கோவிலுக்கு சொக்கம்பட்டி ஜமீன்‘ குடும்பத்தினர், பக்தர்களுக்கு உணவளிக்கும் சத்திரமாக கல் மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார் .கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு அன்னதானம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இக்கோவிலில் 89 கல்வெட்டுக்கள் இருந்த நிலையில், தற்போது பல கல்வெட்டுக்கள் காணமால் போயுள்ளன. இருக்கும் சில கல்வெட்டுக்களையும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில், கல்மண்டபத்தில் அன்னதானத்துக்கு பக்தர்களால் வழங்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பழங்கால பித்தனை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் பராமரிப்பின்றி இருந்தன. இந்த பாத்திரங்களை பாதுகாப்பு கருதி, பழமையான பாத்திரங்களை கல் மண்டபத்தில் இருந்து, குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள அறைக்கு மாற்றி வைக்கப்பட்டதாக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, அந்த பழைய பாத்திரங்களை மண்டபத்தின் கதவை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படும் செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கதவின் பூட்டை உடைத்து பழமையான பாத்திரங்களை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இந்த பாத்திரங்களை கடந்த ஆண்டு பேரூராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பேரூராட்சி பணியாளர்கள், பழமையான பாத்திரங்களை எடுத்துச் செல்லும் வீடியோவை மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பழமையான பாத்திரங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்கும் போது, இந்த இடம் யாருக்கு சொந்தமான என்பது குறித்து பேரூராட்சிக்கும் அறநிலையத்துறைக்கு இடையே வழக்கு நடைபெற்று வருவதாக தெரிவிக்கும் நிலையில், பாத்திரங்களை எடுத்துச்செல்வது குறித்து பதில் அளிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் திருடு போவதாகவும், அவை அப்போதைய பேரூராட்சி நிர்வாகி தலைமையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்க்கப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்களும், சமுக ஆர்வலங்களும், பேருராட்சி நிர்வாகம் பழங்கால பித்தனை, வெண்கலப் பாத்திரங்களை ஏலம் விட தீர்மானத்துள்ளது என குற்றம் சாட்டு கின்றனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, தொல்லியல்துறை தலையிட்டு, விசாரணை நடத்தி, பழமைவாய்ந்த பொருள்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.