ரவுண்ட்ஸ்பாய்:
குற்றாலத்தில சீசன் ஆரம்பிச்சிடுச்சு.. தண்ணீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது.. அப்படின்னு  சமூக வலைதளங்களல சில பேரு பதிவு போடுறாங்க.   இதை நம்பி, குற்றாலம்  போயிட்டுவந்த நம்ம ஃப்ரண்ட்ஸ், நொந்து போய் திரும்பி வந்திருக்காங்க.
rounds
அருவியில தண்ணியே இலலையாம். சும்மா டுபாக்கூரா சிலபேரு வதந்திய பரப்புறாங்கலாம்.
இதை திருநெல்வேலியில் வசிக்கிற  செங்கோட்டைக்காரரான மூத்த பத்திரிகையாளர்  அண்ணன் செங்கை பாரதியும் (Sengai Bharathi) தனது முகநூல் பக்கத்தில சொல்லியிருக்காரு.
“சீசனே ஆரம்பிக்காத குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவதாக …செய்திகளை வாரி வாரி வழங்குவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அருவியில் தண்ணீர் வரத்து..என்பது இதுதான்” அப்படின்னு  பதிவு போட்டு   குற்றால சீசனை(!)யும் படம் புடிச்சி போட்டிருக்காரு..  பாருங்க..!
a
விஷயம் என்னான்னு கூடுதல் தகவல் கேட்கிறதுக்காக, குற்றாலம் அருகே உள்ள கீழப்பாவூர்ல வசிக்கிற  பத்திரிகையாளர் பிரம்மநாயக அண்ணனுக்கு போ்ன் பண்ணி (Keelapavoor C Piramanayagamகேட்டேன்.
அவரு, “கேரளாவுல அப்பப்ப மழை பெய்யுது. அதனால இங்க அப்பப்ப தண்ணீர் கொட்டுது. அந்த நேரத்துல போட்டோ புடுச்சி  சமூகவலைதளங்த்துல போட்டுடறாங்க. ஆனா அரை மணிநேரம்தான் தண்ணீர் கொட்டும். மத்தபடி தண்ணியே கிடையாது. ஜூலை பதினைஞ்சாம் தேதிக்குப் பிறகுதான் சீசன் ஆரம்பிக்கும். அப்போ வாங்க” என்றார் விவரமாக.
மக்களே…  அவசரப்பட்டு டிரயென்னுக்கு புக் பண்ணிடாதீங்க.. விசாரிச்சுட்டு போய்ட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்க..!