சென்னை:

ட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி செல்வா  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக் கின் விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 10ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உயர்நீதி மன்றம்.

பிரபல இயக்குனர் அட்லி இயக்கும் பெயரிடப்படாத கதையில் நடிகர் விஜய் நடித்து வருகிறது. ஏற்கனவே விஜயை வைத்து அட்லி,  ‘தெறி’, ‘மெர்சல்’ படம் எடுத்திருந்த நிலையில், 3வது முறை யாக விஜயை வைத்து அவரது  63வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு தளபதி63 என பெயரிடப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா சமீபத்தில் செய்தியாளர்களுக்க பேட்டி கொடுத்திருந்தார். அப்போது,  “நான் பெண்கள் கால்பந்து விளை யாட்டை மையமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இதை ட்ரீம் வாரியர் பிக்ஸர் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோ நிறுவனத்திடம் கூறியிருந்தேன் என்றவர்,  படத்தில், நயன்தாரா, கங்கணா ரணாவத் போன்ற பெரிய நடிகைகளை வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த கதையை அட்லி விஜய்யை வைத்து எடுப்பதாக தெரிந்து  அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்றவர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும், ஆனால் அவர்கள் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிடுங்கள் என அனுப்பி விட்டனர், ஆனால், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினர்,  சங்கத்தில் 6 மாதத்திற்கு மேல் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கதை திருட்டு என புகார் தெரிவிக்க முடியாது என தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்துகேபி செல்வா   நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முதல்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் விசாரணையை ஜூன் 10ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா ஏற்கனவே விஜய்சேதுபதியின் ரெகக படத்திலும், விஷ்ணு விஷால் படத்திலும் பணியாற்றி உள்ளார்.