மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜோசப்’.

விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றினார்.

இந்த ரீமேக்கையும் இயக்குநர் எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார் .

இதில் பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்ட பலர் ஆர்.கே.சுரேஷ் உடன் நடித்துள்ளனர். பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015ஆம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.

எனக்கு சொந்தமான விசித்திரன் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு குறித்து பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குனர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.