சென்னை
அமைச்சர் பொன்முடியை சட்ட விரோத [அண பரிவர்த்தனை வழக்கில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொன்முடி செயல்பட்டு வருகிறார். கடந்த, 2006-2011ம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இன்று இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வந்த\போது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது.
அதில் அமைச்சர் பொன்முடி, கன்புளியன்ஸ் நிறுவனம் அமன் நிர்வாக இயக்குநர் கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ்.மிணரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றபத்திரிகையில் அமலாக்கதுறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கூடுதல் குற்றபத்திரிகை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் அமலாக்கதுறை தாக்கல் செய்த கூடுதல் குற்றபத்திரிகையில் உள்ள பொன்முடி, மற்றும் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் வருகிற 19-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.’