சென்னை: நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் விஜய்யின் வருமான வரி கணக்கில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, வருமான வரித்துறை அவருக்கு ரூ.1.5 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டி ருந்தது. வருமான வரித்தறை அறிக்கையில், புலி திரைப்படத்துக்கு பெட்ரா ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.5 கோடி அபராதம் வருமான வரித்துறை விதித்தது.
வருமான வரித்துறையின் அபராதம்விதிப்புக்கு எதிராக விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.