கோச்சடையான் தயாரிப்பாளருக்கு அரஸ்ட் வாரண்ட்! லதா ரஜினிக்கு சிக்கல்

கோச்சடையான் பட விளம்பரம் தொடர்பாக அதன் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு சென்னை மெட்ரோபாலிடன் விரைவு நீதிமன்றம்-1 அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

2014ம் ஆண்டு ரஜினிகாந்தின் நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் வெளியானது. இந்த படத்தை அவரது மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்ட் செய்தார். படம் படுதோல்வி அடைந்தது.

இந்த படத்தை தயாரித்தது டாக்டர் முரளி மனோகரின் தயாரிப்பாளர்  மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

கோச்சடையான் படத்திற்காக விளம்பரம் நிறுவனமாக மீடியா ஒன் அட்வர்டை சிங் ஏஜென்சி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் மீடியாக்களுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்த ஏஜென்சி மூலம் கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்காக ரூ.5 கோடி ரூபாய் செக் படத்தயாரிப்பாளரான முரளி மனோகர் கொடுத்திருந்தார். இந்த செக் பணம் இல்லாமல் திரும்பியது.

இந்த படத்தின் விளம்பரத்திற்காக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் எழுதி கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவரிடம் கேட்டதற்கும் பணம் தர மறுத்துவிட்டார்.

இதுகுறித்து பல முறை கேட்டும் இதுவரை பணம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 2014ம் ஆண்டு படத்தயாரிப்பாளர் மற்றும் பணத்திற்கு உத்தரவாதம் அளித்த லதாரஜினிகாந் மீது வழக்கு தொடரப்பட்டது.

33 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது பிடிவாரன்ட் பிறப்பித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக லதா ரஜினிகாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


English Summary
Court Arrest warrant to the Kochadaiyaan producer! Latha Rajinikanth also problem