சித்தூர்

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதியர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்

ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில்  28 வயதான சிரிஷா என்ற பெண் திங்கள்கிழமை அவரது இரண்டு குழந்தைகள் முன்னிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் மணிக்கப்பாவால் வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

சிரிஷாவின் கணவர் ஆர். திமப்பா, அதே கிராமத்தைச் சேர்ந்த மணிக்கப்பாவிடம் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80,000 கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அவர் சிறிய மாதத் தவணைகளில் செலுத்தி வந்துள்ளார்.

சமீபத்தில், திமப்பா பெங்களூருக்குச் சென்று அங்கு கட்டுமானத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவர் மணிக்கப்பாவுக்குப் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிரிஷா தனது குழந்தைகளுடன் பெங்களூருக்குச் சென்றிருந்ததாகவும், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக திங்கள்கிழமை தனது கிராமத்திற்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

மணிக்கப்பா சிரிஷாவை ஒரு மரத்தில் கட்டிவைத்து பணம் கேட்டுள்ளார். அவரது மனைவியும், மைத்துனியும் சிரிஷாவைத் தாக்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய வீடியோவில், கிராம மக்கள் தடுக்க முயன்றும், மணிக்கப்பாவின் மனைவி முனெம்மா, சிரிஷாவை கன்னத்தில் அறைந்து தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வழக்கில் மணிக்கப்பா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.