நெல்லை:

கொரோனா பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் இருந்து ஒரு தம்பதியினர் தப்பித்துச்சென்று, கோவில்பட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற மேலப்பாளையத்தைச் சேர்ந்த  22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், அந்த ஊர் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அங்கிருந்து  முகம்மது அலி மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் இருவரும் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு வந்துள்ளனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுகுறித்து  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் நேரில் சென்று விசாரணை  நடத்தி,  முகமது அலி மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் இருவரையும் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]