கொல்கத்தா: பாஜகவின் பிடிவாதம் காரணமாக, இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு வருவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மோடிஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றமும் மத்தியஅரசை கடுமையாக சாடியுள்ளது. ஆனால், மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் காட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நாடு உணவு நெருக்கடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களில் மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், நம் நாடு விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும். விவசாயிகள் நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களின் நலனுக்கு எதிரான எதையும் நாம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel