கொல்கத்தா:
பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியின் பல்வேறு பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 48 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறனர். இந்நிலையில், இந்த் சட்டங்களை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுகள் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிலளித்த மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியாது தெரிவித்தது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரும் விவசாயிகளை மதிக்காமல், பாஜக அரசு நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால், இந்தியாவில் விரைவில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.