கள்ள ஓட்டுப்போடத் திட்டம்? தேர்தல் தேதியை மாற்ற முக்கிய கட்சிகள் குரல் கொடுக்காதது ஏன்?

Must read

ப்ரல் 18ந்தேதி புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் மதுரையில் திரள்வது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது… இதில் பல்வேறு உள்குத்துக்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுக்கின்றனர்…

நாடாளுமன்ற தேர்தல் குறித்த  தேர்தல் ஆணையம், பல முறை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு, மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,  அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு என்று தேதியை அறிவித்துள்ளது.

தமிழக அரசு அல்லது தமிழக  அரசியல் கட்சியாகளாகட்டும், ஏப்ரல் 18ந்தேதி அன்று சித்திரை திருவிழா உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதும், அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் பண்டிகை என்பதும் தெரியாதா?

ஏன் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பது மதுரை ஆட்சியருக்கும் தெரியாதா?

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரையில் குவிவது வழக்கம்.

அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகங்களை போக்க வேண்டுமானால் தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டியது அவசியம்…

மதுரை சித்திரை திருவிழா எவ்வளவு ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெறும் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.. இதை பாரம்பரிய திருவிழாவை  நேரில் பார்த்திருக்காதவர்களும், தொலைக்காட்சி நேரலை மூலம் பார்த்திருப்பார்கள்…

மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் நாளில்,  தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஒரு நிமிடம் யோசியுங்கள் அதிகாரிகளே…. ஆர்ப்பாட்டமாக அன்று நடைபெறும் சித்திரை திருவிழாவில் பங்குபெறும் மக்கள், திரும்ப வந்து தங்களது வாக்குகளை செலுத்து வார்களா? அல்லது வாக்குகளை செலுத்திவிட்டு திருவிழாவில் கலந்துகொள்ள மதுரை பயணமாவார்களா?

தமிழக மக்களுக்கு தேர்தலை விட பக்தியே அதிகம் என்பது பல்வேறு நிகழ்வுகள் மூலம் நாம் கண்டிருக்கிறோம், ஆனால், தேர்தல் ஆணையம் அன்றைய தினம் வாக்குப்பதிவுக்கு மேலும் 2 மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கலாம் என்று சல்ஜாப்பு சொல்கிறது… இது யாரை ஏமாற்ற….?

தேர்தலை தள்ளிவைக்கக் கோரி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மறுப்பு தெரிவித்து வருகிறார்.. .

ஏன் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது…? ஓரிரு நாள் தள்ளி வைப்பதால் ஏதும் ஆகப்போவதில்லை… ஆனால் தேர்தல் ஆணையம் முரண்டு பிடிக்கிறது… காரணம் என்ன?

ஏற்கனவே மோடியின்  கண்ணசைவுக்கு ஏற்க தேர்தல் தேதியை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், மோடியின், எடப்பாடி அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப தமிழகத்திலும் நடனம் ஆடி வருவதாக கூறப்படுகிறது….

ஏப்ரல் 18ந்தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் 18 சட்டமன்ற தொகுதி களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டிப்பாக தேர்தலை புறக்கணித்து விட்டு, சித்திரைத் திருவிழாவுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்…

வாக்குப் பதிவின் அவசியம் குறித்தும், முழுமையான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம்,  முக்கிய திருவிழா நடைபெறும் நாளன்று தேர்தல் தேதியை அறிவித்து இருப்பது.. ஏன்?

இரண்டும்  ஒரே நாளில் வருவதால் வாக்குப் பதிவு சதவீதத்தில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும்.. தேர்தல் தேதியை மாற்ற மறுக்கிறது…

ஆனால் இதுகுறித்து தமிழக அரசு மட்டுமின்றி திமுக, அதிமுக போன்ற முக்கிய  அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

ஆனால், மதுரை உயர்நீதி மன்றமோ, தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி உள்ளது.…

இருந்தும் தேர்தல் கமிஷன் தனது பிடிவாதத்தை தளர்த்த மறுக்கிறது.

இந்த நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி, ஏப்ரல் 18ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடை பெற்றால்… அது,  நமது அரசியல் கட்சியினருக்கு அல்வா சாப்பிடுவது போல….இதை… இதைத்தான் அவர்கள் எதிர்பார்த்து காத்திதுக்கொண்டிருக்கிறார்கள்…

என்ன காரணம்…? திராவிட கட்சிகளின் கள்ளஓட்டு சமாச்சாரம்தான்…. திமுக, அதிமுக இரு கட்சிகளும் கள்ள ஓட்டு போடுவதில் பிரசித்தம் பெற்றது என்பது தமிழக வாக்காளர்களுக்கு தெரியும்… இருந்தாலும் அன்றைய தினம் தேர்தலை தள்ளி வைக்க மறுத்து தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகவே நிலைப்பாட்டை கொண்டுள்ளது…

அன்றைய தினம்-… பொதுமக்கள் மீனாட்சி அம்மனையும், கள்ளழகரையும் தரிசிக்க தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்  மதுரையை நோக்கி பயணமாவார்கள்…  அவரகள் தாங்கள் ஓட்டு போடுவதை விட மீனாட்சியை தரிசிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்….

இதன் காரணமாக அவர்களின் வாக்குகள் பதிவது தடைபடும்… இந்த ஓட்டுக்களை  கள்ள ஓட்டுக்களாக மாற்ற அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் ஓட்டுக்கள் அனைத்தும் அதிகாரிகள் துணையுடன் கள்ள ஓட்டுக்களாக மாற்றப்பட்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை…

இதை மனதில் கொண்டே, தமிழகத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், ஏப்ரல் 18ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை தள்ளி வைப்பதில் ஆர்வம் காட்டாமல்…. மவுனம் காத்து வருகிறது….

வரலாற்று சிறப்பு மிக்க ஒரு திருவிழா நடைபெறுவது தெரிந்தே தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்…

More articles

Latest article