சென்னை:

மிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் கலைஅறிவியல் படிப்புக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

தமிழகத்தில், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிஏ, பிகாம், பிபிஏ போன்ற கலை அறிவியல் படிப்புக்கும் மாணவர் சேர்க்கையை கவுன்சிலிங்கில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகளுடன்  ஆலோசனை நடைபெற்றதாகவும், இதில், கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த தலைமை செயலர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும்  சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலைஅறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.