வெற்றிப்படங்களில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ள உடை அலங்கார நிபுணர் சத்யா என் ஜே, கனா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
உடை அலங்காரம் மற்றும் நடிப்பு ஆகிய இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் சத்யா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர்/நடிகையரின் ஃபோட்டோ ஷீட் மற்றும் வீடியோ ஷூட்டை வடிவமைத்து இயக்கவும் செய்கிறார்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ள சத்யா, தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை புதுமையான முறையில் கொண்டாடும் வகையில் தனது மனைவியான கோகிலாவுடன் இணைந்து தமிழ்நாட்டின் 7 முக்கிய இடங்களில் பாடல் ஒன்றை ஷூட் செய்துள்ளார். தற்போது பிரபலமாகி வரும் ப்ரீ-வெட்டிங் ஷூட்டில் புதிய டிரெண்டை ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

“ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் அதிசயம் பாடல் 7 உலக அதிசயங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதே பாடலை தமிழகத்தின் 7 அதிசயங்களில் ஷீட் செய்துள்ளோம். பாடலை திருமண வரவேற்பு தினத்தன்று வெளியிடவிருப்பதால், மேலும் விவரங்களை இப்போதே சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. இந்த பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
இப்படாலை படமாக்க மூன்று நாட்கள் ஆனது. இரண்டு கார்களில் குழுவினர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணித்து சிறப்பு வாய்ந்த ‘அதிசயங்களில்’ பாடலை ஷீட் செய்துள்ளனர்.
மேலும், திருமண வரவேற்பன்று இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மணமக்களை போன்று சத்யாவும் கோகிலாவும் தோன்றவுள்ளனர். ஒரு கெட்டப்பில் இருந்து இன்னொரு லுக்கிற்கு மாறுவதற்கு இடைப்பட்ட அவகாசத்தில் அதிசயம் பாடல் விருந்தினர்களுக்கு திரையிடப்படும்.
சத்யா நடித்துள்ள திரைப்படங்கள் தொடர்ந்து திரைக்கு வரவுள்ள நிலையில், உடை அலங்கார நிபுணராகவும் பல்வேறு படங்களில் அவர் பணியாற்றி வருகிறார்.
வீடியோ:
[youtube-feed feed=1]