அனேகல்:
கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

அனேகல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏ. மகன் 8 கோடி ரூபாயுடன் சிக்கியதை நினைவுகூர்ந்த ராகுல், கர்நாடகத்தில் ஊழல் நடப்பது பிரதமர் மோடிக்கும் தெரியும் என்றார்.
மேலும் டபுள் என்ஜின் பொருத்தியுள்ளதாக கூறும் பிரதமர் எந்த என்ஜினில் எவ்வளவு கிடைத்தது என கூறுங்கள் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.
Patrikai.com official YouTube Channel