புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு 5ஆண்டுகளில் 10மடங்கு உயர்ந்துள்ளது, இது, அவர் வேட்புமனு தாக்கலின்போது கொடுத்துள்ள அஃபிடவிட் மூலம் தெரிய வந்துள்ளது.
விராலிமலை தொகுதில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கொரோனா ஊழல் குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல அமைந்துள்ளது திடீரென சொத்துமதப்பு அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். மக்களிடைய அனுதாபத்தை பெறும் வகையில், இருசக்கர வாகனத்தில் வந்து, இலுப்பூரில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த பிரம்மாண பத்திரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், தனக்கு அசையும் சொத்தாக 29 கோடியே 77 லட்சத்து 3,890 உள்ளது, அசையா சொத்தாக 7 கோடியே 94 லட்சத்து 7,984 உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கடர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனக்கு அசையும் சொத்தாக 3 கோடியே 52 லட்சத்து 81,094 உள்ளதாகவும், அசையா சொத்தாக ரூ.1 கோடியே 55 ஆயிரம் உள்ளாாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவரது சொந்து மடங்கு சுமார் 10 மடங்கு உயர்ந்துளளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காலக்கட்டமான கடந்த 2020ம் ஆண்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுகாதார சேவை மற்றும் மருந்துகள் கொள்முதலில் மாபெரும் முறைகேடுகள், ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். தற்போது சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்து மதிப்பை பார்க்கும்போது, திமுக தலைவர் குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்க வேண்டுமா? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…