ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்! கமல்ஹாசன்

Must read

சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்காக டில்லியில் இருந்து தமிழகம் வந்த கெஜ்ரிவாலை, நடிகர் கமலஹாசனின் மகள் அக்ஷரா விமான நிலையம் சென்று வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டில், நடிகர் கமலஹாசனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு நடைபெற்றது.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து இருவரும் கூட்டாக  செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது,

வணக்கம். அய்யா கெஜ்ரிவால் இங்கே வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இருவரும் என்ன பேசியிருப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஊழலுக்கு எதிர்ப்பான யாருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடு கிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. நாடு ஊழலில் சிக்கி கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கெஜர்வால் பேசியதாவது,

நடிகராகவும் நல்ல மனிதராகவும் நான் அவரது ரசிகன். நாங்கள் இருவரும் நாட்டில் உள்ள ஊழல் தீவிரமாக ஆலோசனை செய்தோம்.

நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம். இருவரும் இணைந்து செயலாற்றுவது பற்றியும் விவாதித்தோம். இந்த சந்திப்பு மேலும் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article