சென்னை: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மாதிரி பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை மாநகரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்ச்ர மகனான தமிழக  விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி தலைமை வகித்தார். இதில்,  நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு, நெடுஞ்சாலைத்துறை எ.வ.வேலு, நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நீரவ்ளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  வடகிழக்குப் பருவமழையின்போது, தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்கவைப்பதற்கு 169 நிவாரண மையங்களையும், மழைநீரை வெளியேற்ற 1,183 மோட்டார் பம்புகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மாதிரி பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். மீட்பு பணிகளுக்கான திட்டத்தை வரையறுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும்,  நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் மழைநீர் வடிகால்களை தூர் வார வேண்டும். மின்வாரிய பெட்டிகளை சாலை மட்டத்திலிருந்து 3 அடி உயரத்துக்கு மேல் நிறுவ வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு,   சென்னையில் மாநகராட்சி சார்பில்53.42 கி.மீ. நீளத்தில் 33 கால்வாய்களும், 3,040 கி.மீ. நீளத்தில் 11,770மழைநீர் வடிகால்களும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 237 கி.மீநீளத்தில் 42 மழைநீர் வடிகால்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, 792 கி.மீ. நீள மழைநீர் வடிகால்களில் தூர்வாரப்பட்டு வருகிறது.

இதுவரை 611 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 69,017 வண்டல் வடிகட்டி தொட்டிகள் உள்ளன. இவற்றில் இதுவரை 68,746 தொட்டிகளில் தூர் வாரப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவழையை முன்னிட்டு, 1,150 கி.மீ. நீள மழைநீர் வடிகால்களிலும் 70,304 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இந்த  கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சசிகாந்த் செந்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், மின்வாரிய தலைமை மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நீர்வளத் துறை செயலர் கே.மணிவாசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைகள் துறை செயலர் ஆர்.செல்வராஜ், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.