சென்னை: சென்னையில் தெரு பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டிய 252 பேர் மீது மாநகராட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதன்மீது காவல்துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையின் தெருக்களில் பலலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெரு பெயர் பலகைகள் மீது நோட்டீஸ் ஒட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் விளம்பரம், பிறப்பு, இறப்பு, வியாபார விளம்பரம் போன்றவைகளில், தெரு பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு, அந்த பகுதியின் பெயர், தெரு பெயர் மறைக்கப்பட்டு வருகிறது. இதை நோட்டீஸ் ஒட்டும் தரப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை தடுக்கும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடைபெறும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றனர்.
இதையொட்டி, தெரு பெயர் பலகைகள் மீது நோட்டீஸ் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தெரு பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டிய 252 பேர் மீது மாநகராட்சி தரப்பில் போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நவம்பர் மாதத்தில் சென்னையில் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,37,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதத்தில் 01.12.2022 முதல் 15.12.2022 வரை ரூ.1,21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது மாநகராட்சியின் சார்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரி8வித்துள்ள மாநகராட்சி அதிகாரிகளி, கடந்த 15 நாட்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டிய 252 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையுடனும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் கண் கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்றுகள் அமைத்தல், சாலை மையத் தடுப்புகளில் அழகிய செடிகளை அமைத்தல் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தவிர்ப்பதில் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எ
னவே, சென்னை மாநகரில் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.