சேலம்,
கடந்த ஆண்டு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன் விவரங்களை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்,கல்வி, விவசாய கடன்களைவிட கார்பரேட்டுகளுக்கு 900% அதிக கடன்களை வங்கிகள் வாரி வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல்களை ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
சேலத்தை சேர்ந்த செந்தில்பாபு என்பவர் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் வாயிலாக இந்தியா வில் கடந்த ஆண்டு (2016) பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள லோன் பற்றிய விவரங்கள் குறித்த தகவல் கேட்டு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், விவசாய கடன், கல்வி கடன், சில்லரை வணிக கடன், தொழில்துறை கடன் ஆகிய வற்றுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை விவரங்களை தெரிவிக்கும்படி கோரியிருந்தார்.
அவரது மனுவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பதில் தெரிவித்துள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள லோன் விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாமாணிய மக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதித்தும், அதை வசூலிக்க ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும் வங்கிகள், தொழில்துறையிருக்கு கடனை வாரி வழங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாதாரண ஏழை விவசாயிகளின் பயிர் கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்களை தர மறுக்கும் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கடன்களை வாரி வழங்கி உள்ளது.
விவசாயத்துக்கு போராடி பெறும் கடன்களையும், வறட்சி காரணமாக விவசாய கடன்களை செலுத்த முடியவில்லை என்றால், அவர்களை மிரட்டி, கடலை வசூலிக்கும் வங்கிகள், தொழிலதிபர்கள் வாங்கும் கடன்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தகவல் உரிமை பெறும் சட்டத்தின்மூலம் நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
டிசம்பர் 2016 வரை பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் கொடுத்துள்ள கடன்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள அதிகாரப்பூர்வமான கடன் குறிந்த விவரங்கள் இதோ,
பொதுத்துறை வங்கிகள் (Gross non-performing asset -GNPA) சொத்து சாராத கடன்களாக கொடுக்கப்பட்டுள்ள விவரம்
மொத்த ஜிஎன்பிஏ: 6,01,759 கோடிகள்
விவசாய கடன்கள் : 53,828 கோடிகள்
கல்வி மற்றும் சில்லரை வணிக கடன்: 5,971 கோடிகள்
ஆனால், தொழில்துறையினருக்கான கடன்கள்: 4,31,514 கோடிகள்.
தனியார்துறை வங்கிகள் (Gross non-performing asset -GNPA) சொத்து சாராத கடன்களாக கொடுக்கப்பட்டுள்ள விவரம்
மொத்த ஜிஎன்பிஏ: 69,922 கோடிகள்
விவசாய கடன்கள் : 4,937 கோடிகள்
கல்வி மற்றும் சில்லரை வணிக கடன்: 365 கோடிகள்
ஆனால், தொழில்துறையினருக்கான கடன்கள்: 38,203 கோடிகள்.
ஆர்பிஐ-ன் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள்மூலம், பொதுத்துறை வங்கிகளும், தனியார்துறை வங்கிகளும், கல்வி கடனாக மிகக்குறைந்த அளவும், விவசாயத்திற்கு ஓரளவு குறைந்த அளவு கடனும் கொடுத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது.
ஆனால் தொழிலதிபர்களுக்கு கடன்களை வாரி வழங்கி உள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை
விவசாயத்திற்கு 58,765 கோடிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது
அதுபோல் சில்லரை வணிகங்கள் மற்றும் கல்வி கடனாக 6,336 கோடிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தொழிதிபர்களுக்கு மட்டும் 4,69,717 கோடி கடனாக கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள தகவல்கள்படி,
நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய கடன்களை விட 900 சதவிகிதம் அதிகமாக கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு கடன்களை வாரி வழங்கி உள்ள அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
எற்கனவே நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்கும்போது, தான் விவசாயிகள் தோழன் என்றும், பாரதியஜனதா அரசு ஏழைகளின் அரசு என்று கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு,
ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி விட்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து, தொழிலதிபர்களுக்கே சாதகமாக திகழ்ந்து வருகிறது என்பது இதன்மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.